E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2974/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ஹேஷா விதானகே, பா.உ.

    1. 2974/2023

      கௌரவ ஹேஷா விதானகே,— மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இரத்தினபுரி மாவட்டத்தில் காணப்படுகின்ற பதிவு செய்யப்பட்ட சிறுவர் இல்லங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுக்கும் அமைய தனித்தனியே யாது என்பதையும்;

      (ii) மேற்படி ஒவ்வொரு சிறுவர் இல்லத்தினதும் பெயர், பதிவினைப் பெற்றுக் கொண்டுள்ள நபர்/ நிறுவனத்தின் பெயர், தற்போது இருக்கின்ற ஆண் பிள்ளைகளின் எண்ணிக்கை மற்றும் பெண் பிள்ளைகளின் எண்ணிக்கை தனித்தனியே யாது என்பதையும்;

      (iii) பெரும்பாலான சிறுவர் இல்லங்களில் துஷ்பிரயோக செயற்பாடுகள் இடம்பெறுவதாக பதிவாகி வருவதால், மேற்படி சிறுவர் இல்லங்களைக் கண்காணிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-11-27

கேட்டவர்

கௌரவ ஹேஷா விதானகே, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2023-11-27

பதில் அளித்தார்

கௌரவ கீதா சமன்மலீ குமாரசிங்ஹ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks