பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2327/ ’12
கெளரவ சஜித் பிரேமதாச,— பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2000 ஆம் ஆண்டு தொடக்கம் 2011 ஆம் ஆண்டு வரையான காலத்தில் ரூபா. 900/- மற்றும் ரூபா. 1500/- என்றவாறு நிவாரண உதவிகளை பெற்ற சமுர்த்தி பயனாளிகளிலிடமிருந்து சமுர்த்தி வங்கிகள் ஊடாக வருடாந்தம் அறவிடப்பட்ட கட்டாய சேமிப்புத் தொகை;
(ii) கட்டாய சேமிப்பு அறவிடப்பட்ட மேற்படி சமுர்த்தி பயனாளிகளில் தற்போது சமுர்த்தி கொடுப்பனவு இரத்துச் செய்யப்பட்டுள்ள எண்ணிக்கை;
(iii) இவ்வாறு சமுர்த்தி இரத்தாக்கப்பட்ட சமுர்த்தி பயனாளிகளில் தற்போது கட்டாய சேமிப்பை மீளப்பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை;
(iv) இவ்வாறு செலுத்தப்பட்ட மொத்தப் பணத் தொகை;
(v) தற்போது சமுர்த்தி இழக்கச் செய்யப்பட்ட சமுர்த்தி பயனாளிகளில் கட்டாய சேமிப்பு மீளச் செலுத்தப்பட வேண்டியுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை;
மாவட்ட மட்டத்தில் தனித்தனியாக எவ்வளவென்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) (i) சமுர்த்தி நிகழ்ச்சித்திட்டத்திலிருந்து விலகிய சமுர்த்தி பயனாளிகளின் கட்டாய சேமிப்பை மீளச் செலுத்தி முடிப்பதற்கு எடுக்கும் காலம் எவ்வளவென்பதையும்;
(ii) தற்சமயம் மரணமடைந்துள்ள சமுர்த்தி பயனாளிகளின் கட்டாய சேமிப்பை செலுத்துவதில் பின்பற்றப்படும் நடைமுறை யாதென்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2012-11-16
கேட்டவர்
கௌரவ சஜித் பிரேமதாச, பா.உ.
அமைச்சு
பொருளாதார அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2012-11-16
பதில் அளித்தார்
கௌரவ லக்ஷமன் யாப்பா அபேவர்தன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks