E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3108/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சிவஞானம் சிறீதரன், பா.உ.

    1. 3108/2023

      கௌரவ சிவஞானம் சிறீதரன்,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) யாழ்ப்பாணம், நெடுந்தீவில் இன்றளவில் இருக்கின்ற மாடுகளின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;

      (ii)​ நெடுந்தீவில் உள்ள கால்நடைகளின் எண்ணிக்கை ஒவ்வொரு கால்நடை இனங்களின் அடிப்படையில் வெவ்வேறாக எத்தனை என்பதையும்;

      (iii) மேற்படி கால்நடைகளுக்கு அவசியமான உணவு மற்றும் நீர்த் தேவை எவ்வாறு பூர்த்தி செய்யப்படுகின்றது என்பதையும்;

      அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) (i) நெடுந்தீவில் விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகமொன்று நிறுவப்பட்டுள்ளதா என்பதையும்;

      (ii) நெடுந்தீவிற்கென நிரந்தர கால்நடை வைத்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளாரா என்பதையும்;

      (iii) இன்றேல், அதற்கான காரணம் யாதென்பதையும்;

      (iv) மேற்படி தீவிற்கு நிரந்தர கால்நடை வைத்தியர் ஒருவர் நியமிக்கப்படும் திகதி யாதென்பதையும்;

      அவர் குறிப்பிடுவாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-09-20

கேட்டவர்

கௌரவ சிவஞானம் சிறீதரன், பா.உ.

அமைச்சு

கமத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2023-09-20

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks