E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3175/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

    1. 3175/2023

      கௌரவ தயாசிறி ஜயசேக்கர,— கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இரசாயனப் பசளையின் பயன்பாட்டைத் தடை செய்து, சேதனப் பசளையை அறிமுகப்படுத்திய வருடத்திற்கு முன்னரான 5 வருடங்களில் இலங்கையின் வருடாந்த தேயிலை அறுவடையானது மெற்றிக் தொன்களில் யாதென்பதையும்;

      (ii) அக்காலப்பகுதியில் ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலையின் அளவானது மெற்றிக் தொன்களில் யாதென்பதையும்;

      (iii) அக்காலப்பகுதியில் வருடாந்த ஏற்றுமதி வருமானம் யாதென்பதையும்;

      ஒவ்வொரு வருடத்தின் அடிப்படையில் தனித் தனியே அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) சேதனப் பசளை அறிமுகப்படுத்தப்பட்ட வருடத்திலிருந்து இதுவரையான காலப்பகுதியில் வருடாந்த தேயிலை அறுவடையானது மெற்றிக் தொன்களில் யாதென்பதையும்;

      (ii) அக்காலப்பகுதியில் ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலையின் அளவானது மெற்றிக் தொன்களில் யாதென்பதையும்;

      (iii) அக்காலப்பகுதியில் வருடாந்த ஏற்றுமதி வருமானம் யாதென்பதையும்;

      ஒவ்வொரு வருடத்தின் அடிப்படையில் தனித் தனியே அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) (i) இரசாயனப் பசளையின் பயன்பாட்டை தடை செய்வதற்கு முன்னரும், பின்னரும் இலங்கையின் தேயிலை உற்பத்தியில் ஏற்பட்ட அதிகரிப்பு மற்றும் வீழ்ச்சி சதவீத அடிப்படையில் யாதென்பதையும்;

      (ii) தேயிலை உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக இன்றளவில் மேற்கொள்ளப் பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

      அவர் மேலும் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-11-27

கேட்டவர்

கௌரவ தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

அமைச்சு

கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டத்துறை

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2023-11-27

பதில் அளித்தார்

கௌரவ டீ. பி. ஹேரத், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks