பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3226/2023
கௌரவ இம்தியாஸ் பாகிர் மாகார்,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2019 ஆம் ஆண்டின் பின்னர் களுத்துறை மாவட்டத்தில் தேசிய பாடசாலைகளாக மாற்றியமைக்கப்பட்ட மாகாண பாடசாலைகளின் எண்ணிக்கை, மேற்படி ஒவ்வொரு பாடசாலையினதும் பெயர், உள்ளடங்கும் கல்வி வலயம், மாணவர்களின் எண்ணிக்கை, தேசிய பாடசாலையாக மாற்றியமைக்கப்பட்ட திகதி என்பன தனித்தனியே யாவை என்பதையும்;
(ii) மாகாண பாடசாலையாக காணப்பட்ட காலம் முதல் நீண்ட காலமாக மேற்குறிப்பிட்ட பாடசாலைகளில் சேவையாற்றி, இடமாற்றம் கோரியுள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை, மேற்படி ஒவ்வொரு ஆசிரியரும் சேவையாற்றும் பாடசாலை, சேவைக் காலம் மற்றும் கல்வி வலயம் என்பன தனித்தனியே யாவை என்பதையும்;
(iii) மேற்படி இடமாற்றங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;
(iv) இதன் காரணமாக ஏற்படுகின்ற ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும்;
(v) மேற்படி இடமாற்றங்களை வழங்கும் போது தொடர்புடைய பாடசாலை, தேசிய பாடசாலையாக மாற்றியமைக்கப்பட்ட திகதி முதல் மூன்று வருட சேவைக்காலத்தைப் பூர்த்தி செய்திருத்தல் வேண்டுமென தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;
(vi) ஆமெனில், மேலே (ii) இல் குறிப்பிடப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு இதன் காரணமாக ஏற்படுகின்ற அநீதியைத் தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-05-25
கேட்டவர்
கௌரவ இம்தியாஸ் பாகிர் மாகார், பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks