E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3232/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ நிரோஷன் பெரேரா, பா.உ.

    1. 3232/2023

      கௌரவ நிரோஷன் பெரேரா,— போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) நீர்கொழும்பு – குளியாப்பிட்டி வீதியில், தும்மோதரை புதிய பாலத்தை நிர்மாணிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடு எவ்வளவு என்பதையும்;

      (ii) மேற்படி பாலத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட திகதி யாதென்பதையும்;

      (iii) குறித்த பாலத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவு செய்யப்படவேண்டிய திகதி யாதென்பதையும்;

      (iv) மேற்படி பாலத்தின் நிர்மாணப் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனம் யாதென்பதையும்;

      (v) இன்றளவில் மேற்படி ஒப்பந்த நிறுவனத்திற்குச் செலுத்தப்பட்டுள்ள தொகை எவ்வளவு என்பதையும்;

      (vi) தும்மோதரை புதிய பாலத்தின் நிர்மாணப் பணிகளை துரிதமாக நிறைவு செய்வதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-09-20

கேட்டவர்

கௌரவ நிரோஷன் பெரேரா, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks