E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3237/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.

    1. 3237/2023
      கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,— 
      (அ) (i) 2021 ஆம் ஆண்டு தொடக்கம் அமய அடிப்படையில் ஆட்சேர்க்கப்பட்ட சுமார் 500 ஊழியர்கள் இன்றளவில் வரையறுக்கப்பட்ட லங்கா சதொச நிறுவனத்தில் பணியாற்றுகின்றனரா என்பதையும்;
      (ii) அவர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளனவா என்பதையும்;
      (iii) இன்றேல், அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (ஆ) (i) மேற்குறித்த ஊழியர்களுக்கான சேவை நிபந்தனைகள் யாவையென்பதையும்;
      (ii) இலங்கையில் நடைமுறையிலுள்ள தொழில் சட்டங்கள் மேற்படி ஊழியர்கள் தொடர்பில் மீறப்பட்டுள்ளனவா என்பதையும்;
      (iii) அரச ஊழியர்கள் தொடர்பில் 2016 ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரை நல்லாட்சி அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகளுக்கு அமைவாக இந்த ஊழியர்களுக்கான சம்பளம் தயாரிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-05-25

கேட்டவர்

கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks