பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3265/2023
கௌரவ எம்.எஸ்.தௌபீக்,— பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) மாத்தறை, மாலிம்பட பொலிஸ் ஆளுகைப் பிரதேசத்தில், தெலிஜ்ஜவில, சொறகொட கிராமத்தில் அமைந்துள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட முஸ்லீம்களின் சடலங்களை ஒழுங்கமைந்த கும்பலொன்று தோண்டி எடுத்துச் செல்வது தொடர்பில் மாலிம்பட பொலிஸ் நிலையம் அறிந்துள்ளதா என்பதையும்;
(ii) அது தொடர்பில் 2020.06.16 ஆம் திகதி C.I.B. (2) 332/125 ஆம் இலக்கத்தின் கீழ் மாலிம்பட பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாடு சம்பந்தமாக முறையான விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;
(iii) ஆமெனின், இன்றளவில் அவ்விசாரணையின் முன்னேற்றம் யாதென்பதையும்;
(iv) மேற்படி மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ள முஸ்லீம்களின் சடலங்கள் காணாமல் போவதை தடுப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கை யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-06-08
கேட்டவர்
கௌரவ எம். எஸ். தௌபீக், பா.உ.
அமைச்சு
பொதுமக்கள் பாதுகாப்பு
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4
பதில் தேதி
2023-06-08
பதில் அளித்தார்
கௌரவ டிரான் அலஸ், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks