E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3267/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ எம். எஸ். தௌபீக், பா.உ.

    1. 3267/2023

      கௌரவ எம்.எஸ். தௌபீக்,— பிரதம அமைச்சர் மற்றும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,— 

      (அ)     (i)     1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தினதும் 1975 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க வீதிகளுக்குப் பெயரிடுதல் மற்றும் நினைவுச் சின்னங்களை அமைத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல் சட்டத்தினதும் ஏற்பாடுகளை மீறி திக்வெல்ல பிரதேச சபை அதிகாரப் பிரதேசத்தில் அமைந்துள்ள “அசாத்புர” கிராமத்தின் பெயர் மற்றும் திக்வெல்ல - பெலியத்த பிரதான வீதியின் இருமருங்கிலும் “யோனக்கபுர” என குறிப்பிடப்பட்டிருந்த பெயர்ப்பலகைகள் அகற்றப்பட்டு வேறு பெயர்கள் பொறிக்கப்பட்ட பெயர்ப்பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன என்பதை அறிவாரா என்பதையும்;

      (ii) ஆமெனில், மேற்படி விடயம் தொடர்பில் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் செயலாளருக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      (iii) இவ்விடயம் குறித்து தென் மாகாண உள்ளூராட்சி ஆணையாளரினால் திக்வெல்ல பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் செயலாளருக்கு அனுப்பிய 4/2/4 ஆம் இலக்க மற்றும் 2022.02.08 ஆம் திகதிய கடிதம் சம்பந்தமாக இதுவரை எதுவிதமான பதிலும் அளிக்கப்படாமை தொடர்பில் அவர்களுக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;

      (iv) ஆமெனில், அத் திகதிகள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

       

கேட்கப்பட்ட திகதி

2023-05-25

கேட்டவர்

கௌரவ எம். எஸ். தௌபீக், பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks