பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3316/2023
கௌரவ சட்டத்தரணி சந்திம வீரக்கொடி,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கொவிட்-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்காக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட தடுப்பூசி வகைகள் யாவையென்பதையும்;
(ii) இறக்குமதி செய்யப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கையானது ஒவ்வொரு தடுப்பூசி வகைக்கமைவாக தனித்தனியாக எத்தனையென்பதையும்;
(iii) மேற்படி தடுப்பூசி வகைகளை உற்பத்திசெய்த நாடுகள் யாவையென்பதையும்;
(iv) மேற்படி தடுப்பூசிகளை இறக்குமதி செய்த நிறுவனங்கள் யாவையென்பதையும்;
(v) தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்கையில் முறையான பெறுகை நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டனவா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) முதலாவது, இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது மாத்திரைகளுக்காக பயன்படுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கையானது ஒவ்வொரு தடுப்பூசி வகைக்கமைவாக தனித்தனியாக எத்தனை என்பதையும்;
(ii) மேற்படி (அ)(i) இல் குறிப்பிடப்பட்டுள்ள தடுப்பூசி வகைகள் முழுமையாக பயன்படுத்தப்பட்டனவா என்பதையும்;
(iii) எஞ்சியிருப்பின், அவ் எண்ணிக்கையானது ஒவ்வொரு தடுப்பூசி வகைக்கமைவாக தனித்தனியாக எத்தனையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) (i) உரிய தடுப்பூசி மாத்திரைகளைப் பெற்றுக்கொண்ட ஆட்களுக்கு சிக்கல்கள் ஏற்பட்டதா என்பதையும்;
(ii) ஆமெனில், மேற்படி ஆட்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-06-22
கேட்டவர்
கௌரவ சட்டத்தரணி சந்திம வீரக்கொடி, பா.உ.
அமைச்சு
சுகாதாரம்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks