E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3337/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.

    1. 3337/2023

      கௌரவ வாசுதேவ நாணயக்கார,— நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இரத்தினபுரி, குருவிட்ட, "பெரடயிஸ் குளத்தின்" அடியிலுள்ள வண்டல் மற்றும் மணலை அகற்றுவதாக உணர்த்தி இயந்திரசாதனங்களைப் பயன்படுத்தி சுமார் 30 அடி வரை அகழ்ந்து அங்குள்ள இரத்தினக்கல் படிமங்களை வேறொரு பிரதேசத்திற்கு கொண்டுசெல்வதற்கு ஒரு குழு திட்டமிட்டுள்ளது என்பதையும்;

      (ii) அதன் காரணமாக குளத்தின் திண்ம வண்டல் மண் அடுக்கிற்கு சேதம் ஏற்பட்டு குளத்தின் நீர் வற்றிப்போகும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்பதையும்;

      (iii) குளத்தை அண்மித்துள்ள சுமார் 112 கிணறுகள் வற்றிப்போகும் அச்சுறுத்தலும் "லேக் ஸைட்" கிராம மக்களின் வீடுகளில் வெடிப்புகள் ஏற்பட்டு தாழிறங்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளன என்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) மேற்கூறப்பட்டுள்ள வகையில் குளத்தை அகழ்வதற்காக, உரிய பொறுப்புவாய்ந்த அரச நிறுவனங்களிடமிருந்து முறையான அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பதையும்;

      (ii) ஆமெனில், அகழ்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள ஆழம் யாதென்பதையும்;

      (iii) மேற்படி, (அ)(i) இல் குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கை காரணமாக ஏற்படக் கூடிய சூழல் பாதிப்பு தொடர்பாக ஆய்வொன்று மேற்கொள்ளப்படுமா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-07-21

கேட்டவர்

கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.

அமைச்சு

நீர்ப்பாசனம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks