E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3353/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ஜயந்த சமரவீர, பா.உ.

    1. 3353/2023

      கௌரவ ஜயந்த சமரவீர,— புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) தொல்பொருள் திணைக்களத்தினால் இன்றளவில் அடையாளங் காணப்பட்டுள்ள தொல்பொருள் நினைவுச்சின்னங்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

      (ii) மேற்படி ஒவ்வொரு தொல்பொருள் நினைவுச்சின்னத்தினதும் பெயர், அமைந்துள்ள மாகாணம், மாவட்டம் மற்றும் பிரதேச செயலகப் பிரிவு வெவ்வேறாக யாவை என்பதையும்;

      (iii) 2023.06.01 ஆம் திகதியளவில் வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தொல்பொருள் நினைவுச் சின்னங்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

      (iv) மேற்படி ஒவ்வொரு தொல்பொருள் நினைவுச் சின்னத்தினதும் பெயர், அமைந்துள்ள மாகாணம், மாவட்டம் மற்றும் பிரதேச செயலகப் பிரிவு வெவ்வேறாக யாவை என்பதையும்;

      அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) (i) மேற்படி (அ)(iii) இல் குறிப்பிடப்பட்டுள்ள தொல்பொருள் நினைவுச் சின்னங்களில் இன்றளவில் அகழ்வாராய்ச்சி மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்ற தொல்பொருள் நினைவுச் சின்னங்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

      (ii) மேற்படி ஒவ்வொரு தொல்பொருள் நினைவுச் சின்னத்தினதும் பெயர், அமைந்துள்ள மாகாணம், மாவட்டம் மற்றும் பிரதேச செயலகப் பிரிவு வெவ்வேறாக யாவை என்பதையும்;

      (iii) வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள போதிலும் இதுவரை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதுள்ள தொல்பொருள் நினைவுச்சின்னங்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

      (iv) மேற்படி ஒவ்வொரு தொல்பொருள் நினைவுச் சின்னத்தினதும் பெயர், அமைந்துள்ள மாகாணம், மாவட்டம் மற்றும் பிரதேச செயலகப் பிரிவு வெவ்வேறாக யாவை என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-07-21

கேட்டவர்

கௌரவ ஜயந்த சமரவீர, பா.உ.

அமைச்சு

புத்தசாசன, சமயம் மற்றும் கலாசார அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks