E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3483/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ வேலு குமார், பா.உ.

    1. 3483/2023

      கௌரவ வேலு குமார்,— பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபைக்கு உரித்தான தோட்டக் காணிகளில் பாற்பண்ணைகளை நிறுவுவதற்கு 2021.09.06 ஆம் திகதி அமைச்சரவைத் தீர்மானமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை அவர் இச்சபைக்குத் தொிவிப்பாரா?

      (ஆ) (i) ஆமெனில், இதற்கென "கலபொட" மற்றும் "மவுண்ட் ஜீன்" ஆகிய ஒவ்வொரு தோட்டத்திலிருந்தும் பெற்றுக்கொள்ளப்படும் காணிகளின் அளவு ஏக்கர்களில் வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;

      (ii) இக் காணிகளைப் பெற்றுக்கொள்ளும் ஒவ்வொரு கம்பெனியினதும் பெயர், அக்கம்பெனிகளின் பணிபாளர்களின் பெயர்கள், அவர்களின் தேசியம் (உள்நாட்டவரா/வெளிநாட்டவரா) என்பன வெவ்வேறாக யாவையென்பதையும்;

      (iii) மேற்படி ஒவ்வொரு கம்பெனியினால் செலுத்தப்படும் முற்பணத் தொகை மற்றும் ஒரு ஏக்கருக்கான வருடாந்த குத்தகைத் தொகை என்பன வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;

      (iv) மேற்படி தோட்டங்களில் பாற்பண்ணைக்காக ஒதுக்கப்படும் நிலப்பரப்பில் அமைந்துள்ள லயன் வீடுகளினதும் வணக்கஸ்தலங்களினதும் எண்ணிக்கை வெவ்வேறாக எத்தனையென்பதையும்,

      அவர் குறிப்பிடுவாரா?

      (இ) (i) மேற்படி தோட்டங்கள் அமைந்துள்ள மாவட்டங்களில் உள்ள அரச பாற்பண்ணைகளிடம் போதியளவு காணிகள் இருப்பதை அறிவாரா என்பதையும்;

      (ii) அவ்வாறாயின், மேற்படி தோட்டக் காணிகளை பாற்பண்ணைகளுக்காக வழங்கப்பட்டதன் அடிப்படை யாதென்பதையும்;

      (iii) அப் பாற்பண்ணைகளை நிறுவுவதற்காக சாத்தியவள ஆய்வு மேற்கொள்ளப் பட்டுள்ளதா என்பதையும்;

      அவர் குறிப்பிடுவாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-09-06

கேட்டவர்

கௌரவ வேலு குமார், பா.உ.

அமைச்சு

அமைச்சரவை அங்கத்தவர் அல்லாத அரச பெருந்தோட்ட தொழில்முயற்சிகள் மறுசீரமைப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2024-01-12

பதில் அளித்தார்

கௌரவ ரன்ஜித் சியம்பலாபிடிய, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks