E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2489/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

    1. 2489/ ’12

      கெளரவ தயாசிறி ஜயசேகர,— பிரதம அமைச்சரும் பெளத்த சாசன, மத அலுவல்கள்  அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)     நாடு பூராகவுள்ள ‘சாசனாரக்ஷக்க’ சபைகளின் எண்ணிக்கை யாது என்பதையும்;

      (ii) ஒவ்வொரு ‘சாசனாரக்ஷக்க’ சபைக்கும் நிதி ஏற்பாடுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

      (iii) அவ்வாறாயின் 2010 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை வழங்கப்பட்டுள்ள வருடாந்த நிதி ஏற்பாடுகள் வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்

      அவர்  குறிப்பிடுவாரா?

      (ஆ) (i) ‘சாசனாரக்ஷக்க’ சபை எனும் பெயரில் அல்லது அதனையொத்த ஒரு பெயரில் நிதியமொன்றை ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;

      (ii) அவ்வாறாயின் இந்நிதியத்துக்கு நிதி ஏற்பாடுகளைப் பெற்றுக்கொள்ளும் முறை யாது என்பதையும்;

      (iii) நிதியத்தின் நோக்கங்கள் யாவை என்பதையும்

      அவர்  இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-03-06

கேட்டவர்

கௌரவ தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சர் அலுவலகம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2013-03-06

பதில் அளித்தார்

கௌரவ எம்.கே.ஏ.டீ.எஸ். குணவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks