E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2499/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

    1. 2499/ ’12

      கெளரவ தயாசிறி ஜயசேகர,— சீனிக் கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)     அரச வளங்கள், தொழில் முயற்சி அபிவிருத்தி முன்னாள் அமைச்சர் கெளரவ பி.தயாரத்ன ஹிங்குரான சீனித் தொழிற்சாலையின் உற்பத்தி நடவடிக்கைகளை 2011 ஆம் ஆண்டில் ஆரம்பிப்பதாக 2010 ஒற்றோபர் மாதம் 07 ஆந் திகதி பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ள கூற்றுக்கமைய செயற்பட்டிருப்பின் தற்போது அந்த தொழிற்சாலையில் நாளொன்றுக்கு உற்பத்தி செய்யப்படும் சீனியின் அளவு எவ்வளவு என்பதையும்;

      (ii) சீனி உற்பத்தி ஆரம்பிக்கப்படவில்லையெனில், அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்

       அவர்  இச்சபையில் குறிப்பிடுவாரா?

      (ஆ) (i) ஹிங்குரான சீனித் தொழிற்சாலையில் பணிபுரியும் (பயிர்ச் செய்கைப் பிரிவு  மற்றும் தொழிற்சாலையில்) மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;

      (ii) அந்த ஊழியர் எண்ணிக்கை ஒவ்வொரு பதவிக்கமைய வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;

      (iii) இவர்களது சம்பளம், கொடுப்பனவு, சேலாப நிதியம் என்பவற்றை உரியவாறு செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதையும்

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-03-21

கேட்டவர்

கௌரவ தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

அமைச்சு

சீனிக் கைத்தொழில் அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2013-03-21

பதில் அளித்தார்

கௌரவ லக்ஷமன் செனவிரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks