பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2500/ ’12
கெளரவ தயாசிறி ஜயசேகர,— சீனிக் கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) கந்தளாய் சீனித் தொழிற்சாலையை மீள் கட்டமைப்பதற்காக நீண்ட கால குத்தகையின் கீழ் தனியார் முதலீட்டாளர்களுக்கு கையளிப்பதற்காக 2011ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் முன்மொழிவுகள்/விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன என்பதை அவர் அறிவாரா?
(ஆ) (i) கந்தளாய் சீனித் தொழிற்சாலை தற்போது தனியார் முதலீட்டாளர் ஒருவருக்கு கையளிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) அவ்வாறெனின் அந்தக் கையளிப்பு மேற்கொள்ளப்பட்ட திகதி, கையளிக்கப்பட்ட நிறுவனம், கம்பனி, அல்லது முதலீட்டாளர் யார் என்பதையும்;
(iii) அந்தக் கையளிப்பு மேற்சொள்ளப்பட்ட விலைகள் யாவை என்பதையும்;
(iv) அந்தத் தொழிற்சாலை கையளிக்கப்பட்ட நிபந்தனைகள் யாவை என்பதையும்
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(இ) (i) தற்போது இந்த தொழிற்சாலையில் சீனி உற்பத்தியை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) எதிர்பார்க்கப்பட்ட நாளாந்த உற்பத்திக் கொள்வனவு எவ்வளவு என்பதையும்;
(iii) தற்போது உற்பத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படாவிட்டால் அதற்கான காரணங்கள் என்ன என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-03-21
கேட்டவர்
கௌரவ தயாசிறி ஜயசேக்கர, பா.உ.
அமைச்சு
சீனிக் கைத்தொழில் அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2013-03-21
பதில் அளித்தார்
கௌரவ லக்ஷமன் செனவிரத்ன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks