E   |   සි   |  

 திகதி: 2024-12-17   பதிலளிக்கப்பட்டவைகள் 

0001/ 2024 - கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 1/2024

      கௌரவ ஹேஷா விதானகே,— மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கையில் உள்ள முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி நிலையங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (ii) அவற்றுள் அரச பதிவுடைய முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி நிலையங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (iii) அரச பதிவினைப் பெற்றுக்கொள்ளாமல் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி நிலையங்களை நடத்திச் செல்ல முடியுமா என்பதையும்;

      (iv) முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி நிலையமொன்றை நடத்திச் செல்வதற்கு பூர்த்தி செய்ய வேண்டிய ஆகக் குறைந்த அடிப்படைத் தகைமைகள் யாவையென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி நிலையங்களை மேற்பார்வை செய்வதற்கான வேலைத் திட்டமொன்று உள்ளதா என்பதையும்;

      (ii) ஆமெனில், அவ்வேலைத்திட்டம் யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2024-12-17

கேட்டவர்

கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.

அமைச்சு

மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2024-12-17

பதில் அளித்தார்

கௌரவ சரோஜா சாவித்திரி போல்ராஜ், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks