E   |   සි   |  

 திகதி: 2025-01-10   பதிலளிக்கப்பட்டவைகள் 

0102/ 2025 - கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 102/2024

      கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர,— வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இன்றளவில் நாட்டரிசி மற்றும் சம்பா அரிசி கிலோகிராமொன்றின் சந்தை விலை தனித்தனியே யாதென்பதையும்;

      (ii) அரிசி விலையைக் குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும்;

      (iii) அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்படுமா என்பதையும்;

      (iv) ஆமெனில், அவ்விலை யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) நுகர்வோருக்கு தட்டுப்பாடின்றி அரிசியைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் தலையீடு செய்து அரிசி கையிருப்பை பேணிச் செல்லுமா என்பதையும்;

      (ii) ஆமெனில், அக்கையிருப்புத் தொகை எவ்வளவென்பதையும்;

      (iii) அரிசி இறக்குமதி தொடர்பான வேலைத்திட்டம் யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-01-10

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

அமைச்சு

வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2025-02-06

பதில் அளித்தார்

கௌரவ வசந்த சமரசிங்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks