E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0126/ 2025 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

    1. 126/2024

      கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர,— நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2024.01.01 ஆம் திகதி தொடக்கம் 2024.09.21 ஆம் திகதி வரை சர்வதேச நாணய நிதியத்திலிருந்து இலங்கை பெற்றுக்கொண்டுள்ள மொத்தக் கடன் தொகை எவ்வளவென்பதையும்;

      (ii) 2024.09.21 ஆம் திகதி தொடக்கம் தற்போது வரை சர்வதேச நாணய நிதியத்திலிருந்து இலங்கை பெற்றுக்கொண்டுள்ள மொத்தக் கடன் தொகை எவ்வளவென்பதையும்;

      (iii) மேற்படி (ii) இல் குறிப்பிடப்பட்டுள்ள கடன் தொகை எத்தனை சந்தர்ப்பங்களில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பதையும்;

      (iv) மேற்படி கடன்தொகைகள் பெறப்பட்டதன் நோக்கம் யாதென்பதையும்;

      (v) மேற்படி கடன்தொகைகளுக்காக அறவிடப்படும் வட்டி விகிதம் யாதென்பதையும்;

      (vi) மேற்படி கடன் தவணைகளை திருப்பிச் செலுத்த ஆரம்பிக்க வேண்டிய திகதி மற்றும் செலுத்தி முடிக்கப்பட வேண்டிய திகதி வெவ்வேறாக யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-03-14

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks