E   |   සි   |  

 திகதி: 2025-01-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

0173/ 2025 - கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 173/2024

      கௌரவ ரவி கருணாநாயக்க,— நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) கடந்த 30 ஆண்டுகளாக இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் யாது என்பதையும்;

      (ii) விவசாயத் துறை, கைத்தொழில் துறை, மற்றும் சேவைத் துறையின் மீதான சார்ந்திருப்பை குறிப்பிட்டு அடுத்த 15 ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சிக்கான கணிப்பு யாது என்பதையும்;

      வெவ்வேறாக அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) துரித வளர்ச்சிக்காக அரசாங்கத்தினால் அடையாளங் காணப்பட்ட பத்து பிரதான துறைகள் யாவைதென்பதையும்;

      (ii) அடுத்த பத்து ஆண்டுகளுக்கு இலங்கை ரூபாய் மற்றும் ஐக்கிய அமெரிக்க டொலர் ஆகியவற்றில் உத்தேசிக்கப்பட்ட பெறுமதி உள்ளடங்கலாக உள்நாட்டு முதலீட்டாளர்கள் மீது அரசாங்கம் எந்தளவிற்கு கவனம் செலுத்தவும், கட்டுப்படுத்தவும் உத்தேசிக்கின்றது என்பதையும்;

      (iii) அடுத்த பத்து ஆண்டுகளுக்கு இலங்கை ரூபாய் (SLR) மற்றும் ஐக்கிய அமெரிக்க டொலர் (USD) ஆகியவற்றில் உத்தேசிக்கப்பட்ட பெறுமதி உள்ளடங்கலாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மீது அரசாங்கம் எந்தளவிற்கு கவனம் செலுத்தவும், கட்டுப்படுத்தவும் உத்தேசிக்கின்றது என்பதையும்;

      அவர் இச்சபைக்கு தெரிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-01-07

கேட்டவர்

கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2025-01-07

பதில் அளித்தார்

கௌரவ அனில் ஜயந்த, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks