பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
187/2024
கௌரவ ரோஹினி குமாரி விஜேரத்ன,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) தற்போது இலங்கையில் விலங்கு பண்ணைகளில் வளர்க்கப்படும் பன்றிகளிடையே பரவி வரும் தொற்று நோய் காரணமாக பன்றிகள் மரணமடைகின்றன என்பதையும்,
(ii) இதனால் சிறிய மற்றும் பெரிய அளவிலான விலங்குப் பண்ணைகளை முழுமையாக மூடிவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதென்பதையும்;
(iii) இந்நோய்க்குரிய தடுப்பூசி அல்லது ஔடதங்கள் இன்மையால் விலங்குகள் மரணமடைந்து வருவதால் உரிமையாளர்கள் பெரும் நட்டத்தை சந்தித்து வருகின்றனரென்பதையும்;
(iv) மேற்படி சம்பவத்தால் ஏற்பட்ட நட்டம்/பாதிப்புக்காக இவர்களுக்கு இழப்பீடு அல்லது நிவாரணம் வழங்கப்படுவதில்லையென்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) மேற்குறிப்பிட்ட நோய் காரணமாக மரணமடையும் விலங்குகளுக்காக இழப்பீட்டை/கொடுப்பனவை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;
(ii) ஆமெனில், மேற்படி இழப்பீட்டை/கொடுப்பனவை பெற்றுக்கொடுக்கும் திகதி யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-01-07
கேட்டவர்
கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன, பா.உ.
அமைச்சு
கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks