E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0237/ 2025 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (செல்வி) சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர, பா.உ.

    1. 237/2024

      கௌரவ சட்டத்தரணி (செல்வி) லக்மாலி ஹேமசந்திர,— வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) கொரியாவுக்கு வேலைவாய்ப்புக்காக செல்லும் இலங்கை ஊழியர்களுக்கு வழங்கப்படும் வீசா வகைகள் யாவை என்பதையும்;

      (ii) E8 வீசாவின் கீழ் இலங்கை ஊழியர்களை கொரிய அரசாங்க வேலைவாய்ப்புகளுக்காக அனுப்புவதற்கு கடந்த அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்தின் அடிப்படை யாதென்பதையும்;

      (iii) இதன் கீழ் கொரிய நாட்டிற்கு வேலைவாய்ப்புகளுக்காக சென்றுள்ள ஊழியர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (iv) மேற்படி ஊழியர்கள் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர் என்பதை அறிவாரா என்பதையும்;

      (v) ஆமெனில், அவ்வாறு இன்னலுக்கு உள்ளாகியுள்ளவர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (vi) இவர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) கொரியாவிற்கு வேலைவாய்ப்புகளுக்காக இலங்கை ஊழியர்கள் E8 வீசாவின் கீழ் மாத்திரமே அனுப்பி வைக்கப்படுகிறார்களா என்பதையும்;

      (ii) ஏனைய வீசா வகைகள் உள்ளதாயின், அவை யாவை என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-01-09

கேட்டவர்

கௌரவ (செல்வி) சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர, பா.உ.

அமைச்சு

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks