E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0239/ 2025 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (டாக்டர்) நிஷாந்த சமரவீர, பா.உ.

    1. 239/2024

      கௌரவ (டாக்டர்) நிஷாந்த சமரவீர,— சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கையில் நிலவிய பொருளாதார நெருக்கடி காரணமாக வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள் மற்றும் ஏனைய பயிற்றுவிக்கப்பட்ட சுகாதாரத் துறையைச் சார்ந்த தொழில்வாண்மையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறினார்கள் என்பதையும்;

      (ii) அதன் காரணமாக இலங்கையின் சுகாதாரத் துறைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதையும்;

      அவர் ஏற்றுக்கொள்வாரா?

      (ஆ) (i) தற்போது இலங்கைச் சுகாதாரச் சேவையில் கடமையாற்றும்;

      (ii) எதிர்காலத்தில் அரசாங்க சுகாதாரச் சேவையை முறையான சேவையாக முன்னெடுப்பதற்கு இருக்க வேண்டிய;

      (iii) 2022 ஆம் ஆண்டு தொடக்கம் 2024 ஆம் ஆண்டு நவம்பர் வரை ஓய்வு பெறும் வயதை அடையாமல் சேவையிலிருந்து விலகிச் சென்ற;

      (iv) நிபுணத்துவ பயிற்சி உட்பட பல்வேறு கல்வி சார் நிறுவனங்களில் தற்போது பயிற்சி பெற்று வருகின்ற;

      வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள், நிறைவுகாண் மற்றும் துணை மருத்துவச் சேவை அலுவலர்கள் மற்றும் கனிஷ்ட நிலை அலுவலர்கள் ஆகியோரின் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இவர்களைத் துரிதமாக சுகாதாரச் சேவையில் இணைத்துக் கொள்வதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவையென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-01-09

கேட்டவர்

கௌரவ (டாக்டர்) நிஷாந்த சமரவீர, பா.உ.

அமைச்சு

சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks