E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0241/ 2025 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (டாக்டர்) நிஷாந்த சமரவீர, பா.உ.

    1. 241/2024

      கௌரவ​ (டாக்டர்) நிஷாந்த சமரவீர,— சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) "குடும்ப மருத்துவம்" (Family Medicine) எனும் பெயரில் நிபுணத்துவ பயிற்சித் துறையொன்றைத் தாபிப்பதன் மூலம் எதிர்பார்க்கப்படுவது யாதென்பதையும்;

      (ii) இன்றளவில் மேற்படி எதிர்ப்பார்ப்பினைப் பூர்த்தி செய்யும் வகையில், அதாவது பொது மக்களுக்கும் ஆரம்ப நிலை மருத்துவச் சேவைக்கும் அண்மித்து செயலாற்றும் வகையில், குறித்த நிபுணத்து​​​வ மருத்துவர்கள் சேவை இணைப்புச் செய்யப்பட்டுள்ளார்களா என்பதையும்;

      (iii) இன்றேல், சிற்சில தனிப்பட்ட தேவைகளின் நிமித்தம் நகர்புறங்களை அண்மித்த மருத்துவமனைகளுக்கு சேவை இணைப்புச் செய்யப்பட்டுள்ளார்களா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-01-23

கேட்டவர்

கௌரவ (டாக்டர்) நிஷாந்த சமரவீர, பா.உ.

அமைச்சு

சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks