E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0260/ 2025 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (செல்வி) சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர, பா.உ.

    1. 260/2024

      கௌரவ (செல்வி) சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர,— நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) சமூக செலவுகள் தொடர்பில் இலங்கை, சர்வதேச நாணய நிதியத்தின் இலக்கை அடையவில்லையென 2024.11.23 ஆந் திகதி நடைபெற்ற ஊடக சந்திப்பில் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை அலுவலகத்தின் பிரதானி திரு.பீட்டர் புரூவர் தெரிவித்துள்ளதை அறிவாரா என்பதையும்;

      (ii) 2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் அஸ்வெசும, மூத்த பிரஜைகள், நாட்பட்ட நோய்களுக்கு ஆளாகியுள்ளவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மொத்த நிதித்தொகை யாதென்பதையும்;

      (iii) 2024.11.23 ஆந் திகதியளவில் மேற்படி பணத்தொகையில் செலவு செய்யப்பட்டுள்ள பணத்தொகை யாதென்பதையும்;

      (iv) இதன் சதவீதம் யாதென்பதையும்;

      (v) சர்வதேச நாணய நிதியம் சமூக செலவுகளுக்காக (Social Spending) வழங்கும் இலக்கின் பிரகாரம் 2024 ஆம் ஆண்டில் சமூக செலவுகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணத்தொகை யாதென்பதையும்;

      (vi) இதற்கு போதியளவு நிதியை ஒதுக்கீடு செய்யாமைக்கான காரணங்கள் யாவையென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-01-23

கேட்டவர்

கௌரவ (செல்வி) சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks