பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
289/2024
கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம்,— சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) "கொவிட் –19" பெருந்தொற்றினால் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதற்கு எதிராக தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டதால், மட்டக்களப்பு "மஜ்மா நகர்" பிரதேசத்தின் காணி ஒன்றில் அவ்வுடல்கள் அடக்கம் செய்யப்பட்டதை அறிவாரா என்பதையும்;
(ii) மரணமடைந்த பின்னர் அவ்வாறு அடக்கம் செய்யப்பட்ட ஒவ்வொரு நபரினதும் பெயர், முகவரி, சமயம், பாலினம், சடலத்தின் பதிவிலக்கம், அடக்கம் செய்யப்பட்ட திகதி, அடக்கம் செய்யப்பட்டபோது மரணித்த ஒவ்வொருவர் சார்பிலும் கலந்துகொள்வதற்கு அனுமதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை, அவ்வாறு கலந்துகொண்ட நபர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகள் தனித்தனியே யாவையென்பதையும் ;
(iii) மரணித்த ஒவ்வொருவரின் நல்லடக்க நிகழ்வில் கலந்துகொண்ட நபர்களிடமிருந்து பணம் அறிவிடப்பட்டதா என்பதையும்;
(iv) ஆமெனில், அறவிடப்பட்ட தொகை எவ்வளவு என்பதையும்;
(v) பணம் அறவிடுவதற்காக அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள்/நபர்கள் பற்றிய விபரங்கள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-02-05
கேட்டவர்
கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம், பா.உ.
அமைச்சு
சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks