பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
293/2024
கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம்,— சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2024 நவம்பர் மாதம் இலங்கையில் பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக கல்முனை, அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் சத்திர சிகிச்சைக்கூடம், தீவிர சிகிச்சைப் பிரிவு, நோயாளர் தங்கும் அறைகள், வெளி நோயாளர் பிரிவு, சாய்சாலைகள், மருந்துக் களஞ்சியங்கள் உட்பட வைத்தியசாலை வளாகம் முற்றாக நீரில் மூழ்கியது என்பதையும்;
(ii) அதன் காரணமாக மேற்படி வைத்தியசாலையின் நடவடிக்கைகள் செயலிழந்தன என்பதையும்;
(iii) நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலை வளாகத்தை மென்மேலும் பாதுகாப்பாக பேணிவர வேண்டும் என்பதையும்;
அவர் ஏற்றுக் கொள்வாரா?
(ஆ) (i) மேற்படி வைத்தியசாலை நீரில் மூழ்கியதன் காரணமாக ஏற்பட்டுள்ள சேதம் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) ஆமெனில், மேற்படி சேதம் எவ்வளவு என்பதையும்;
(iii) மேற்படி சேதத்தை வழமைக்குக் கொண்டு வருவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
(iv) எதிர்காலத்தில் அவ்வாறான நிலைமை ஏற்படாதிருப்பதற்கு மற்றும் வைத்தியசாலை வளாகத்தை மென்மேலும் பாதுகாப்பாக பேணிவருவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-03-14
கேட்டவர்
கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம், பா.உ.
அமைச்சு
சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks