பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
314/2024
கௌரவ ரவி கருணாநாயக்க,— கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) சமுர்த்தி வங்கியின் வசமுள்ள சொத்துக்களின் தற்போதைய பெறுமதி யாதென்பதையும்;
(ii) இலங்கையிலுள்ள சமுர்த்தி வங்கிகள் மற்றும் சமுர்த்தி மகா சங்கங்களின் எண்ணிக்கை யாதென்பதை வெவ்வேறாகவும்;
(iii) அனைத்து சமுர்த்தி மகா சங்கங்கள் வசமுள்ள சொத்துக்களின் தற்போதைய பெறுமதி யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) சமுர்த்தி வங்கிகள் இலங்கை மத்திய வங்கியின் கண்காணிப்பின் கீழ் உள்ளனவா என்பதையும்;
(ii) இல்லையெனின், அதன் கண்காணிப்பிற்கு உட்படாமைக்கான காரணங்கள் யாதென்பதையும்;
(iii) சமுர்த்தி வங்கியின் பணிப்பாளர் சபையின் தலைவர் யார் என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) (i) கடந்த 10 வருடங்களில் சமுர்த்தி வங்கியினால் ஈட்டப்பட்ட இலாபம்/ நட்டம் யாதென்பதை வெவ்வேறாகவும்;
(ii) கடந்த 10 வருடங்களில் சமுர்த்தி வங்கியின் ஐந்தொகைப் பெறுமதி யாதென்பதை வெவ்வேறாகவும்;
(iii) சமுர்த்தி வங்கியின் பங்குதாரர்கள் யார் என்பதையும்;
(iv) வைப்பாளர்களுக்குச் செலுத்தப்பட்ட வட்டி வீதம் மற்றும் சமுர்த்தி வங்கியினால் சீரமைக்கப்பட்டவாறு கடன் பெறுநர்களுக்கான கடன் வீதம் வெவ்வேறாக யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு மேலும் அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-09-25
கேட்டவர்
கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.
அமைச்சு
கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks