E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0317/ 2025 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ தேவானந்த சுரவீர, பா.உ.

    1. 317/2024

      கௌரவ தேவானந்த சுரவீர,— நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) கொழும்பு –11, ஓல்கொட் மாவத்தையில் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த சில வர்த்தகர்களை தத்தமது வர்த்தக நிலையங்களிலிருந்து அகற்றி "மிதக்கும் சந்தை'' வளாகத்தில் இவர்களுக்கு வர்த்தக நிலையங்கள் வழங்கப்பட்டுள்ளனவா என்பதையும்;

      (ii) போதிய வியாபாரம் இன்மையால் மேற்படி வர்த்தக நிலையங்கள் இன்றளவில் தோல்வியைச் சந்தித்துள்ளதை அறிவாரா என்பதையும்;

      (iii) அதனால், மேற்படி வர்த்தகர்கள் தாங்கள் ஏற்கெனவே வர்த்தகச் செயற்பாடுகளை முன்னெடுத்த இடங்களை மீளக் கோருவதை அறிவாரா என்பதையும்;

      (iv) ஆமெனில், ஏற்கெனவே வர்த்தகச் செயற்பாடுகளை முன்னெடுத்த இடங்களை இவர்களுக்கு வழங்குவதற்கான சாத்தியம் காணப்படுகின்றதா என்பதையும்;

      (v) "மிதக்கும் சந்தை"யை விருத்திசெய்வதற்காக இன்றளவில் மேற்கொண்டுள்ள நடவடிக்கை யான்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-01-23

கேட்டவர்

கௌரவ தேவானந்த சுரவீர, பா.உ.

அமைச்சு

நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks