E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0324/ 2025 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ லால் பிரேமநாத், பா.உ.

    1. 324/2024

      கௌரவ லால் பிரேமநாத்,— பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்ற தேயிலைக்கு செஸ்வரி அறிவிடப்படுவதனை அறிவாரா;

      (ii) தற்பொழுது ஒரு கிலோகிராம் தேயிலைக்காக அறவிடப்படுகின்ற செஸ்வரி எவ்வளவு;

      (iii) 2024 ஆம் ஆண்டில் மேற்படி செஸ்வரி மூலமாக ஈட்டப்பட்ட வருமானம் எவ்வளவு;

      (iv) மேற்படி வருமானத்திலிருந்து, இலங்கை தேயிலைச் சபை, சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகார சபை மற்றும் தேயிலை ஆராய்ச்சி நிலையம் ஆகிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பணத்தொகை வெவ்வேறாக எவ்வளவு;

      (v) மேலே குறிப்பிடப்பட்ட ஒவ்வொரு நிறுவனமும் மேற்படி பணத்தொகையை செலவு செய்துள்ள விதம் தொடர்பிலான அறிக்கையொன்றினை சமர்ப்பிப்பாரா;

      என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-01-22

கேட்டவர்

கௌரவ லால் பிரேமநாத், பா.உ.

அமைச்சு

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks