E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0425/ 2025 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ இம்ரான் மகரூப், பா.உ.

    1. 425/2025

      கௌரவ இம்ரான் மகரூப்,— சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2024.01.01 தொடக்கம் 2024.12.31 ஆம் திகதி வரையான காலப்பகுதியினுள் நாய்க்கடிக்கு ஆளாகி சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

      (ii) மேற்படி காலப்பகுதியினுள் நாய்க்கடிக்கு ஆளாகிய திருகோணமலை மாவட்டத்தில் வசிக்கும் நபர்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

      (iii) குறித்த காலப்பகுதியினுள் கட்டாக்காலி நாய்க்கடிக்கு ஆளாகிய திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த நபர்களின் எண்ணிக்கை மேற்படி மாவட்டத்தின் ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரி பிரதேசத்திற்கமைய வெவ்வேறாக எத்தனை என்பதையும்;

      (iv) மேற்படி காலப்பகுதியினுள் நாய்க்கடிக்கு அதிகமாக ஆளாகிய நபர்கள் வசிக்கும் மாவட்டம் யாதென்பதையும்;

      (v) நாய்க்கடிக்கு ஆளாகின்ற நபர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக வருடாந்தம் செலவு செய்யப்படும் பணத்தொகை எவ்வளவு என்பதையும்;

      (vi) நாய்க்கடிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-02-20

கேட்டவர்

கௌரவ இம்ரான் மகரூப், பா.உ.

அமைச்சு

சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks