பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
427/2025
கௌரவ இம்ரான் மகரூப்,— நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையால் திருகோணமலை மாவட்டத்தில் குடிநீர் வழங்கப்பட்டுள்ள பிரதேசங்கள் மற்றும் குடிநீர் வழங்கப்படாதுள்ள பிரதேசங்கள் வெவ்வேறாக யாவை என்பதையும்;
(ii) குச்சவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட குச்சவெளி, புடவைக்கட்டு, திரியாய் மற்றும் சலப்பையாறு போன்ற பிரதேசங்களுக்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் மூலம் குடிநீர் வழங்கப்படாததால், அந்தப் பிரதேசங்களில் வசிக்கும் சுமார் 5000 குடும்பங்கள் குடிநீரைப் பெறுவதில் கடும் சிரமங்களை எதிர்கொண்டிருப்பதை அறிவாரா என்பதையும்;
(iii) மேற்படி பிரதேசங்களுக்கு துரிதமாக குடிநீரைப் பெற்றுக்கொடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதா என்பதையும்;
(iv) பொதுவாக திருகோணமலை மாவட்டத்தில் குடிநீர் வசதிகளை மேம்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) 2022.01.01 தொடக்கம் 2024.01.01 வரை கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் குடிநீர் விநியோகம் தடைப்பட்டிருந்த மணித்தியாலங்கள் எத்தனை என்பதையும்;
(ii) இவ்வாறு தடைப்பட்டமை மீது தாக்கம் செலுத்திய அடிப்படைக் காரணம் யாது என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-04-08
கேட்டவர்
கௌரவ இம்ரான் மகரூப், பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2025-04-08
பதில் அளித்தார்
கௌரவ அனுர கருணாதிலக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks