E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0437/ 2025 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ தினிந்து சமன் ஹென்னாயக்க, பா.உ.

    1. 437/2025

      கௌரவ தினிந்து சமன்,— வலுசக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) பதுளை மற்றும் மொனராகலை முதலிய இரண்டு மாவட்டங்களின் எல்லைப் பிரதேசங்களிலுள்ள சிங்களயாகம, உனகந்த மற்றும் அன்னாசிகல ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கும் வகையில் அமுலாக்கப்பட்டுவரும் மின்சார கருத்திட்டத்திற்கான கோரிக்கையை முன்வைத்தவர் யாரென்பதையும்;

      (ii) மேற்படி கருத்திட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கியவர் யாரென்பதையும்;

      (iii) மேற்படி அனுமதி பெற்றுக்கொடுக்கப்பட்ட நடைமுறை யாதென்பதையும்;

      (iv) மேற்படி கருத்திட்டத்திற்கு செலவிடப்பட்ட தொகை எவ்வளவென்பதையும்;

      (v) மேற்படி கருத்திட்டத்தை அமுலாக்கும்போது, வனப்பாதுகாப்புத் திணைக்களம், சம்பந்தப்பட்ட நிரல் அமைச்சு மற்றும் சம்பந்தப்பட்ட பிற நிறுவனங்களின் முறையான அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;

      (vi) ஆமெனில், அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்ட திகதி வெவ்வேறாக யாவை என்பதையும்;

      (vii) இவற்றுடன் தொடர்புடைய ஆவணங்களின் பிரதிகளை சமர்ப்பிப்பாரா என்பதையும்;

      அவர் தொிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-03-15

கேட்டவர்

கௌரவ தினிந்து சமன் ஹென்னாயக்க, பா.உ.

அமைச்சு

வலுசக்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks