E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0440/ 2025 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ரவீந்திர பண்டார, பா.உ.

    1. 440/2025

      கௌரவ ரவீந்திர பண்டார,— இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) பண்டாரவளை பொது விளையாட்டரங்கு (நகர சபை விளையாட்டரங்கு) விளையாட்டுப் போட்டிகளை நடாத்துவதற்கு உகந்த நிலையில் காணப்படவில்லை என்பதையும்;

      (ii) மேற்படி விளையாட்டரங்கில் நீர் வழிந்தோடுவதற்கு முறையான வழிமுறையொன்று இல்லை என்பதையும்;

      (iii) அங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள வடிகாலமைப்பின் காரணமாக கிரிக்கட் போட்டிகளை நடாத்த முடியாதுள்ளது என்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) 2015 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை மேற்படி விளையாட்டரங்கை நவீனமயப்படுத்த செலவிடப்பட்ட தொகை ஆண்டுவாரியாக வெவ்வேறாக யாது என்பதையும்;

      (ii) மேற்படி விளையாட்டரங்குக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு சம்பந்தமான விசாரணை நடாத்தப்படுமா என்பதையும்;

      (iii) பண்டாரவளை பிரதேச விளையாட்டு வீரர்களுக்கு மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு பயன்படுத்தக் கூடியவகையில் மேற்படி விளையாட்டரங்கை நவீனமயப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும்;

      (iv) ஆமெனில், அது தொடர்பான எதிர்காலத் திட்டங்கள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-02-19

கேட்டவர்

கௌரவ ரவீந்திர பண்டார, பா.உ.

அமைச்சு

இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks