E   |   සි   |  

 திகதி: 2025-02-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

0445/ 2025 - கௌரவ மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஜீ.டி.சூரியபண்டார, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 445/2025
      கௌரவ மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஜீ.டீ. சூரிய பண்டார,— பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) முப்படைக்கான விசேட ஆட்சேர்ப்பு (இராணுவம்சார்) முறையின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட படை வீரர்கள் பல்வேறு தொழில்களில் கடமை நிமித்தம் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பதையும்;
      (ii) இவர்கள் அந்த சேவைகளுக்கே தனித்துவமான சீருடைகளின்றி சிவில் உடையில் அல்லது வேலைக்கான உடை அணிந்து கடமையாற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்;
      (iii) அதற்கு உட்பட்டதாக இலங்கை கடற்படையின் தகவல் தொழில்நுட்ப பிரிவில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள 43 படை வீரர்களுக்கு சீருடைகள் அணியுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதால் சிக்கல் தோன்றியுள்ளது என்பதையும்;
      அவர் அறிவாரா?
      (ஆ) (i) விசேட ஆட்சேர்ப்பின் கீழ் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டு இன்றளவில் சேவையிலுள்ள படைவீரர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;
      (ii) இவர்களுக்குரிய கடமைகள் மற்றும் உரித்தான சலுகைகள் வெவ்வேறாக யாதென்பதையும்;
      (iii) சிவில் உடைக்கு மேலதிகமாக சேவைகளுக்கே தனித்துவமான சீருடைகளை இவர்கள் அணிய முடியுமா என்பதையும்;
      (iv) அவ்வாறாயின், அதற்கான சந்தர்ப்பங்கள் யாவை என்பதையும்;
      (v) இவர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள்/சுற்றறிக்கைகள்/கட்டளைகள் யாரால் வழங்கப்படுகின்றன என்பதையும்;
      (vi) நிறுவனத் தலைவரின் தற்றுணிபின்படி இவர்களை சீருடை அணியுமாறு கட்டளையிட முடியுமா என்பதையும்;
      (vii) (அ)(iii) இல் குறிப்பிட்டுள்ளவாறு படைவீரர்கள் சேவைக்கான சீருடை அணிந்தவாறு கடமையில் ஈடுபடுகின்றனரா என்பதையும்;
      (viii) இன்றேல், சிவில் அல்லது வேலைக்கான உடை அணிந்து கடமையில் ஈடுபடுகின்றனரா என்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-02-24

கேட்டவர்

கௌரவ மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஜீ.டி.சூரியபண்டார, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2025-04-08

பதில் அளித்தார்

கௌரவ மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜயசேகர, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks