E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0454/ 2025 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (திருமதி) ஒஷானி உமங்கா, பா.உ.

    1. 454/2025

      கௌரவ (திருமதி) ஒஷானி உமங்கா,— கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கையிலுள்ள கைத்தொழில் பேட்டைகளில் தற்போது தொழிற்படு நிலையிலுள்ள கைத்தொழில்களின் எண்ணிக்கை, அவற்றில் மேற்கொள்ளப்படுகின்ற உற்பத்திகள் மற்றும் அவற்றுக்குரிய வணிகத் துறைகள் வெவ்வேறாக யாவை என்பதையும்;

      (ii) கைத்தொழில் பேட்டைகளில் தொழிற்பட்ட, தற்போது மூடப்பட்டுள்ள கைத்தொழில்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;

      (iii) தற்போது கைத்தொழில் பேட்டைகள் அதிகபட்ச இயலளவுடன் இயங்குகின்றனவா என்பதையும்;

      (iv) மேற்படி கைத்தொழில் பேட்டைகளில் புதிய கைத்தொழில்களை தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளனவா என்பதையும்;

      (v) இலங்கையிலுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழில்களின் எண்ணிக்கை பற்றிய கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளதா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) புதிய கைத்தொழில் பேட்டைகளை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளனவா என்பதையும்;

      (ii) ஆமெனில், அத்திட்டங்கள் யாவை என்பதையும்;

      (iii) அதற்கான மூலதனத்தைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்படும் வழிமுறை யாது என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-03-03

கேட்டவர்

கௌரவ (திருமதி) ஒஷானி உமங்கா, பா.உ.

அமைச்சு

கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks