E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0488/ 2025 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ உபுல் கித்சிறி, பா.உ.

    1. 488/2025

      கௌரவ உபுல் கித்சிறி,— நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 1992 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது முதல் இற்றைவரை தேசிய இயந்திர உபகரண நிறுவனம் எந்த நிரல் அமைச்சின்/ அமைச்சுக்களின் கீழ் உள்ளது;

      (ii) 2010 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையிலும், 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலும் மற்றும் 2019 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலுமான காலப்பகுதியில் இருந்த ஒவ்வொரு அரசாங்கத்திலும் மேற்படி நிறுவனம் சொந்தமாகவிருந்த நிரல் அமைச்சுக்கு/அமைச்சுக்களுக்குப் பொறுப்பாகச் செயற்பட்ட அமைச்சர்கள் வெவ்வேறாக யாவரென்பதையும்;

      (iii) மேற்படி ஒவ்வொரு அமைச்சரின் கீழும், தேசிய இயந்திர உபகரண நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட்ட கருத்திட்டங்களின் எண்ணிக்கை, அவ்வொவ்வொரு கருத்திட்டத்தினதும் பெயர் மற்றும் பெறுமதி என்பன வெவ்வேறாக யாதென்பதையும்;

      (iv) மேற்குறிப்பிட்ட கருத்திட்டங்களில், இற்றைவரை பணிகள் நிறைவுசெய்யப் படாமலிருக்கும் கருத்திட்டங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-03-04

கேட்டவர்

கௌரவ உபுல் கித்சிறி, பா.உ.

அமைச்சு

நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks