E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2684/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

    1. 2684/ ’12

      கெளரவ ரவி கருணாநாயக்க,— தொலைத்தொடர்புகள், தகவல் தொழிநுட்பவியல் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    “தேசத்திற்கு மகுடம்” கண்காட்சியின் எண்ணக்கருவை அவர் விளக்குவாரா?,

      (ஆ)    (i)      இற்றை வரை ஒவ்வொரு தேசத்திற்கு மகுடம் கண்காட்சியிலும் ஏற்படுத்தப்பட்ட தொழில்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (ii) மேற்குறிப்பிட்ட தொழில்களின் பெயர்கள் யாவையென்பதையும்;

      (iii) இத்தொழில்கள் நிரந்தரமானவையும், ஓய்வூதியத்திற்கு உரித்துடையனவுமா என்பதையும்

      அவர் வெவ்வேறாகக் கூறுவாரா?

      (இ) (i) அனுராதபுர தேசத்திற்கு மகுடம் கண்காட்சிக்கு உண்மையிலேயே எச்செலவுத் தலைப்பிலிருந்து பணம் செலவிடப்பட்டது என்பதையும்;

      (ii) கடந்த தேசத்திற்கு மகுடம் கண்காட்சிக்குத் தேவைப்பட்ட ஊழியம் மற்றும் சொத்துக்கள் போன்றவை எந்தவிதக் கொடுப்பனவுமின்றிப் பாவிக்கப்பட்டதா என்பதையும்; உதாரணமாக, ஆயுதப் படை ஆளணியினர் மற்றும் தொழிலாளர்கள் போன்றோரும், இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் போன்றவையும் செலவு ஆக்கக் கூறுகளாக மொத்த செலவுக் கணிப்பீட்டின் போது உள்ளடக்கப்பட்டிருந்தனவா என்பதையும்;

      (iii) இன்றேல், குறிப்பிட்ட கண்காட்சிக்கான செலவு எவ்வாறு கணிப்பிடப்பட்டது என்பதையும்;

      (iv) எதிர்வரும் மூன்று தேசத்திற்கு மகுடம் கண்காட்சிகளுக்கும் ஏற்படுமென எதிர்பார்க்கின்ற செலவினைத் தனித்தனியாக யாதென்பதையும்

      அவர் இச்சபைக்குத் தெரிவிப்பாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-06-04

கேட்டவர்

கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

அமைச்சு

தொலைத்தொடர்புகள், தகவல் தொழிநுட்பவியல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2014-06-03

பதில் அளித்தார்

கௌரவ ரன்ஜித் சியம்பலாபிடிய, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks