E   |   සි   |  

 திகதி: 2025-09-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

0545/ 2025 - கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 545/2025
      கௌரவ சட்டத்தரணி தயாசிறி தயாசேக்கர,— பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) பிரதி அமைச்சர் ஒருவரின் தனிப்பட்ட பணியாட்டொகுதிக்காக அங்கீகரிக்கப்பட்ட அலுவலர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
      (ii) அப் பிரதி அமைச்சர்கள் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட பணியாட்டொகுதிக்கும் நியமனம் செய்யப்பட்ட ஒவ்வொரு அலுவலரினதும் பெயர், முகவரி, நியமனம் செய்யப்பட்டத் திகதி, செலுத்தப்படும் மாதாந்தச் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள், அச்சம்பளம் தனிப்பட்ட வங்கிக் கணக்குக்கு வைப்பிடப் படாவிடின், அவை வைப்பிடப்படும் வங்கி, செலுத்தப்படும் ஏனைய கொடுப்பனவுகள், அவ்வலுவலர்களுக்கு வாகனங்கள் வழங்கப்பட்டிருப்பின், அவ் வாகனத்தின் இலக்கம், வாகனத்தின் வகை மற்றும் அவ்வாகனத்திற்காக மாதாந்தம் செலுத்தப்படும் எரிபொருள் கொடுப்பனவுகள் என்பன ஒவ்வொரு அமைச்சு வாரியாக வெவ்வேறாக யாதென்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-09-24

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்ச

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks