E   |   සි   |  

 திகதி: 2025-04-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

0570/ 2025 - கௌரவ வருண லியனகே, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 570/2025
      கௌரவ வருண லியனகே,— கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) 1995 ஆம் ஆண்டு தாபிக்கப்பட்ட இலங்கை சமுர்த்தி அதிகாரசபையானது, 2013 ஆம் ஆண்டு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களமாக மாற்றப்பட்டதையும், தற்போது அதில் சுமார் 25,000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர் என்பதையும்;
      (ii) மேற்படி திணைக்களத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு கடந்த ஒரு வருட காலமாக ஓய்வூதியம் செலுத்தப்படுதல் நிறுத்தப்பட்டுள்ளதால் அவர்களும் அவர்களில் தங்கி வாழ்பவர்களும் பாரிய சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர் என்பதையும்;
      (iii) தற்போதைய அரசாங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில், மேற்படி பிரச்சினைக்கு துரிதமாக தீர்வு வழங்கப்படுமென உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது என்பதையும்;
      அவர் ஏற்றுக்கொள்வாரா?
      (ஆ) (i) மேற்படி ஊழியர்களுக்கு, தற்காலிக நடவடிக்கையாக பணிக்கொடையை நிறுத்திவைத்தேனும் ஓய்வூதியத்தை வழங்காமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்;
      (ii) இதற்கு நிரந்தர தீர்வை வழங்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-04-08

கேட்டவர்

கௌரவ வருண லியனகே, பா.உ.

அமைச்சு

கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2025-04-08

பதில் அளித்தார்

கௌரவ உபாலி பன்னிலகே, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks