E   |   සි   |  

 திகதி: 2025-09-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

1257/ 2025 - கௌரவ தர்மப்பிரிய திசாநாயக்க, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 1257/2025
      கௌரவ தர்மப்பிரிய திசாநாயக்க,— பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) இலங்கையில் உள்ள குடும்ப அலகுகளின் எண்ணிக்கை யாது;
      (ii) ஒரு வீட்டுக்குள் பல குடும்ப அலகுகள் வாழும் சந்தர்ப்பங்கள் காணப்படுவதை அவர் அறிவாரா;
      (iii) ஒரு வீட்டுக்குள் பல குடும்ப அலகுகள் வாழும் சந்தர்ப்பங்களில், இக்குடும்பங்களுக்கான வாக்காளர் பெயர்ப் பட்டியலை தயாரிக்கையில், இக்குடும்பங்களை வெவ்வேறாக அடையாளம் காண்பதற்கு கிராம உத்தியோகத்தர்களினால் பின்பற்றப்படும் முறைசார்ந்த நடைமுறை யாது;
      (iv) ஒரு வீட்டுக்குள் பல குடும்ப அலகுகள் வாழும் சந்தர்ப்பங்களில், இக்குடும்பங்களுக்கான செயற்பாடுகளை மேற்கொள்கையில் நடைமுறை ரீதியான மற்றும் நிருவாக ரீதியான பிரச்சினைகள் எழுவதை அறிவாரா;
      (v) ஆமெனில், அதற்கான தீர்வினை வழங்குவாரா;
      (vi) அத்தீர்வுகள் யாவை;
      (vii) தீர்வு வழங்கப்படுவதில்லையெனில், அதற்கான காரணங்கள் யாவை;
      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-09-24

கேட்டவர்

கௌரவ தர்மப்பிரிய திசாநாயக்க, பா.உ.

அமைச்சு

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks