பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1265/2025
கௌரவ அசோக குணசேன,— நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) பொல்கஹவெல, பொத்துஹெர, அளவ்வ குடிநீர் திட்டத்திலிருந்து குடிநீர் விநியோகிக்கப்படவுள்ள பிரதேசங்கள் யாவை;
(ii) இத்திட்டத்தில் உள்வாங்கப்படாத பொல்கஹவெல பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பிரதேசங்கள் யாவை;
(iii) தற்போது கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டினால் இன்னலுக்கு உள்ளாகியுள்ள பொல்கஹவெல பிரதேச செயலகப் பிரிவிலுள்ள, 13 கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த 2500இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மேற்படி குடிநீர் திட்டத்தில் உள்வாங்கப்படவில்லை என்பதை அவர் அறிவாரா;
(iv) இதற்கான காரணங்கள் யாவை;
(v) இக்குடிநீர் திட்டத்தின் பூர்வாங்கத் திட்டத்தில் மேற்படி கிராம அலுவலர் பிரிவு களுக்கும் குடிநீரை விநியோகிப்பதற்கு ஏற்கனவே முன்மொழியப்பட்டிருந்த வேலைத் திட்டம் பின்னர் மாற்றம் செய்யப்பட்டதா;
(vi) அதற்கான காரணங்கள் யாவை;
என்பதை அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் மேற்படி குடிநீர் திட்டத்திற்கென ஒதுக்கப்பட்ட நிதி எவ்வாறான நோக்கங்களுக்காக செலவிடப்படும்;
(ii) இதன் மூலம் அ(iii) இல் குறிப்பிடப்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படுமா;
(iii) மேற்படி குடிநீர் திட்டத்தை தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபை பொறுப்பேற்றுள்ளதா;
(iv) ஆமெனின், மேற்படி குடும்பங்களுக்கு குடிநீரை விநியோகிப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை;
(v) மேற்படி குடிநீர் திட்டத்தில் வீரம்புகெதர பிரதேச செயலகப் பிரிவு உள்வாங்கப்படாமைக்கான காரணங்கள் யாவை;
என்பதையும் அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-09-23
கேட்டவர்
கௌரவ அசோக குணசேன, பா.உ.
அமைச்சு
நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks