பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1320/2025
கௌரவ (திருமதி) ஏ.எம்.எம்.எம். ரத்வத்தே,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கை மகாவலி அதிகார சபையினால் தொலைபேசி கம்பனிகளுக்கு மகாவலி - சீ வலயத்தின், தெஹிஅத்தகண்டிய தொகுதியினுள் நிர்மாணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள தொலைத்தொடர்பு கோபுரங்களின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;
(ii) அதற்காக அரச காணிகள் குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டிருப்பின், அக்காணிகள் வழங்கப்பட்ட நடைமுறை யாது என்பதையும்;
(iii) தனி நபரொருவருக்கு கையுதிர்க்கப்பட்டுள்ள அரச காணியொன்றில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தொலைத்தொடர்பு கோபுரத்துடன் தொடர்புடைய காணித் துண்டின் பெறுமதிக்கு உரித்துக் கோருவதற்கு சம்பந்தப்பட்ட தனிநபருக்கு ஏதேனும் முறையொன்று உள்ளதா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) நவமெதகம தொகுதியில் கைத்தொழில் நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்ட காணியின் ஒரு பகுதி பௌத்த நிலையமொன்றினை ஆரம்பிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) ஆமெனில், மேற்படி காணித் துண்டின் விஸ்தீரணம் எவ்வளவு என்பதையும்;
(iii) மேற்படி பௌத்த நிலையத்தின் நிர்மாணத்திற்காக ஒதுக்கப்பட்ட காணித் துண்டுக்கு அருகில் நிர்மாணிக்கப்பட்ட டயலொக் நிறுவனத்தின் தொலைத்தொடர்பு கோபுரத்திற்கு ஏதுவான குத்தகைப் பணம் முறையாக அறவிடப்பட்டுள்ளதா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-10-09
கேட்டவர்
கௌரவ (திருமதி) ஏ.எம்.எம்.எம். ரத்வத்தே, பா.உ.
அமைச்சு
கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks