பார்க்க

E   |   සි   |  

 திகதி: 2025-11-13   பதிலளிக்கப்பட்டவைகள் 

1395/ 2025 - கௌரவ எம்.எஸ் அப்துல் வாசித், பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 1395/2025
      கௌரவ எம்.எஸ் அப்துல் வாசித்,— வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) அம்பாறை மாவட்டத்தின், பொத்துவில் மற்றும் லாஹுகல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் பாரிய குடிநீர் தட்டுப்பாடு நிலவுகின்றதென்பதையும்;
      (ii) மேற்படி குடிநீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காணும் நோக்கில் 2018, 2019, மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் முறையே 150 மில்லியன், 25 மில்லியன் மற்றும் 50 மில்லியன் ரூபாய் செலவிட்டு கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் 'ஹெட ஓயா' நீர் விநியோகத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது என்பதையும்;
      அவர் அறிவாரா?
      (ஆ) (i) குடிநீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வாக நடைமுறைப்படுத்தப்பட்ட மேற்படி கருத்திட்டத்தின் தற்போதைய நிலைமை யாதென்பதையும்;
      (ii) மேற்படி கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் மேலே (அ) (i) இல் குறிப்பிடப்பட்டுள்ள பிரதேச செயலாளர் பிரிவுகளில் வசிக்கின்ற மக்களின் குடிநீர் தேவைப்பாட்டை பூர்த்தி செய்ய முடியுமென்பதால் குறித்த கருத்திட்டத்தை மீள நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா என்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-11-13

கேட்டவர்

கௌரவ எம்.எஸ் அப்துல் வாசித், பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks