E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1428/ 2025 - கௌரவ திலிண சமரகோன், பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 1428/2025
      கௌரவ திலிண சமரகோன்,— போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்துகளுக்கான உதிரிப் பாகங்களை மொத்தமாகக் கொள்வனவு செய்யும் முறையியல் யாதென்பதையும்;
      (ii) மேற்படி முறையியலில் குறைபாடுகள் காணப்படுவதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
      (iii) ஆமெனில், அவை யாவை என்பதையும்;
      (iv) இவ்விடயம் தொடர்பில் குறைபாடுகள் காணப்படாத முறையியலொன்றை அறிமுகப்படுத்துவதற்கான இயலுமை காணப்படுகின்றதா என்பதையும்;
      (v) உதிரிப் பாகங்கள் தொடர்பாக பின்பற்றுகின்ற இருப்புக் கட்டுப்பாட்டு முறையியல் யாது என்பதையும்;
      (vi) மேற்படி முறையியல் எப்போதிருந்து பயன்படுத்தப்படுகின்றது என்பதையும்;
      (vii) இருப்புக் கட்டுப்பாட்டிற்கான கணனி முறைமையொன்று தயாரிக்கப்படுமா என்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-11-11

கேட்டவர்

கௌரவ திலிண சமரகோன், பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks