E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2849/ 2012 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ வசந்த அலுவிஹாரே, பா.உ.

    1. 2849/ ’12

       

      கௌரவ வசந்த அலுவிஹாரே,— கூட்டுறவு, உள்நாட்டு வர்த்தக அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)      நுவரெலியா பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்கு உரித்தான இரண்டு மாடிக் கட்டடமொன்றை குத்தகைக்கு வழங்குவதற்காக 2011 டிசெம்பர் 19 ஆம் திகதி பத்திரிகை அறிவித்தல் மூலம் கேள்விப் பத்திரம் கோரப்பட்டதா என்பதையும்;

      (ii) ஆமெனில், சமர்ப்பிக்கப்பட்ட விலை மனுக்கள் யாவை என்பதையும்;

      (iii) அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைகளுக்கு அமைய கேள்விப் பத்திரங்கள் கோரலின் போது கவனத்தில் கொள்ளப்படுகின்றதும் முன்னுரிமை வழங்கப்படுகின்றதுமான விடயங்கள் யாவை என்பதையும்;

      அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) மேற்படி கட்டடத்தை,

      (i) பெற்றுக் கொள்வதற்கு ரூபா 320,000/- மற்றும் ரூபா 355,000/- என்றவகையில் விலை மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன என்பதையும்;

      (ii) கேள்விப் பத்திர விண்ணப்பத்தையேனும் சமர்ப்பிக்காத ஒருவருக்கு தற்போது வழங்கப்பட்டுள்ளது என்பதையும்;

      (iii) குத்தகைக்கு வழங்குவதில் முறைகேடு இடம்பெற்றுள்ளது என்பதையும்;

      (iv) முறைகேடான முறையில் வழங்கியதன் காரணமாக விண்ணப்பதாரர்களுக்கு அநீதியும், குறித்த கூட்டுறவுச் சங்கத்திற்கு நட்டமும் ஏற்பட்டுள்ளது என்பதையும்

      அவர் ஏற்றுக் கொள்வாரா?

      (இ) (i) உச்சளவான கேள்விப் பத்திரத்துக்கு கட்டடம் வழங்கப்படாமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்;

      (ii) தற்போது கட்டடம் வழங்கப்பட்டுள்ளவரிடமிருந்து கூட்டுறவுச் சங்கம் பெற்றுக் கொள்கின்ற பணத் தொகை எவ்வளவு என்பதையும்;

      (iii) மேற்படி, முறைகேடு தொடர்பாக முறையான விசாரணையை நடாத்தி கேள்விப் பத்திரதாரர்களுக்கு நீதியை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும்;

      (iv) ஆமெனில், அதற்கு காலம் எவ்வளவு எடுக்கும் என்பதையும்

      அவர் குறிப்பிடுவாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2012-08-22

கேட்டவர்

கௌரவ வசந்த அலுவிஹாரே, பா.உ.

அமைச்சு

கூட்டுறவு, உள்நாட்டு வர்த்தக

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2013-04-09

பதில் அளித்தார்

கௌரவ ஜோன்ஸ்டன் பர்னாந்து, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks