E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2851/ 2012 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.

    1. 2851/ ’12

      கௌரவ அஜித் பி. பெரேரா,—  சமூக சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)      2000 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க முதியோர் உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் முதியோர் அடையாள அட்டைகள் வழங்கப்படுமா என்பதையும்;

                 (ii)     மேற்படி அடையாள அட்டையின் பின்புறத்தில் சுகாதார சேவைகள், வங்கிச் சேவைகள், பொலிஸ் மற்றும் சட்ட ஆலோசனைகள் , தபால், ஓய்வூதியம் மற்றும் அலுவலக நடவடிக்கைகள் போன்ற சேவைகளின்போது அடையாள அட்டையின் உரிமையாளருக்கு முன்னுரிமையளிக்கப்படுதல் வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதையும்

      அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) மேற்படி முன்னுரிமையைப் பெற்றுக்கொடுப்பதற்காக,

      (i) அரசாங்கத்தினால் ஆக்கப்பட்டுள்ள சட்டங்கள் மற்றும் விதிக்கப்பட்டுள்ள ஒழுங்கு விதிகள் யாவையென்பதையும்;

      (ii) மேற்படி சட்டங்களையும் ஒழுங்குவிதிகளையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பாரா என்பதையும்;

      (iii) இன்றேல், அதற்கான காரணங்கள் யாவையென்பதையும்

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) ஆகக் குறைந்தது அரசாங்க ஆஸ்பத்திரியொன்றின் மருத்துவர்களை சந்தித்தல், சிகிச்சை பெறுவதற்கு சமுகமளித்தல் மற்றும் மருந்துகளை பெற்றுக்கொள்ளுதல் போன்ற நடவடிக்கைகளின்போது மூத்த பிரஜைகளுக்கு முன்னுரிமையளிப்பதற்காக சட்ட அதிகாரம் வழங்கப்படுகின்ற சுற்றறிக்கையொன்றை மற்றும்/அல்லது ஒழுங்கு விதியொன்றை கூடிய விரைவில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும் அவர் குறிப்பிடுவாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2012-10-24

கேட்டவர்

கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.

அமைச்சு

சமூக சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2013-02-06

பதில் அளித்தார்

கௌரவ கௌரவ பீலிக்ஸ் பெரேரா, பா.உ.,, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks