E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2868/ 2012 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ கௌரவ எம்.ரி. ஹஸன் அலி, பா.உ.,, பா.உ.

    1. 2868/ ’12

      கௌரவ எம்.ரீ. ஹசன் அலி,—  காணி, காணி அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    அம்பாறை மாவட்டத்தின், ஒலுவில் துறைமுக அபிவிருத்திப் பணிக்காக சாய்ந்தமருது 7, ஒஸ்மான் வீதி, 295 பீ இலக்க முகவரியில் வதியும், திரு.எம்.ஐ.எம்.அன்சாருக்கு சொந்தமான 39.38 பர்ச்சஸ் காணி 1552/12 ஆம் இலக்க, 2008.06.04 ஆம் திகதிய அதிவிஷேட அரசாங்க வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக சுவீகரிக்கப்பட்ட போதிலும், இதற்காக இன்றுவரை நட்டஈட்டுத் தொகை வழங்கப்படவில்லையென்பதை அவர் அறிவாரா?

      (ஆ) அரசாங்க பிரதம விலை மதிப்பீட்டாளரால், காணி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பப்பட்ட AM/LA/293, 294, 300, 306 ஆம் இலக்க 2011.12.30 ஆம் திகதிய கடிதத்திற்கு அமைவாக, திரு.அன்சாருக்கு உரித்துடைய மேற்படி காணியின் சார்பில் கிடைக்க வேண்டிய நட்டஈட்டுத் தொகையை தாமதமின்றி பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் குறிப்பிடுவாரா?

      (இ) இன்றேல், ஏன்?

       

கேட்கப்பட்ட திகதி

2012-11-10

கேட்டவர்

கௌரவ கௌரவ எம்.ரி. ஹஸன் அலி, பா.உ.,, பா.உ.

அமைச்சு

காணி, காணி அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2012-11-10

பதில் அளித்தார்

கௌரவ ஜனக பண்டார தென்னகோன், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks