E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2877/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

    1. 2877/ ’12

      கௌரவ தயாசிறி ஜயசேகர,—  விளையாட்டுத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    2012 கால்டன் றக்பி சுற்றுப்போட்டி,

                 (i)      நடைபெற்ற திகதிகள் யாவையென்பதையும்;

                 (ii)     நடைபெற்ற மைதானங்கள் யாவையென்பதையும்;

                 (iii)    சுற்றுப்போட்டியில் பங்குபற்றிய விளையாட்டு அணிகள் யாவை என்பதையும்

      அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) (i) மேற்படி சுற்றுப்போட்டியில் பங்குபற்றிய வெளிநாட்டு வீரர்கள் யாவரென்பதையும்;

      (ii) மேற்படி ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் செலுத்தப்பட்ட பணத் தொகை தனித்தனியே எவ்வளவென்பதையும்;

      (iii) இதில் பங்குபற்றிய உள்ளூர் விளையாட்டு வீரர்கள் யாவரென்பதையும்;

      (iv) மேற்படி ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் செலுத்தப்பட்ட பணத்தொகை தனித்தனியே எவ்வளவென்பதையும்

      அவர் இச்சபையில் குறிப்பிடுவாரா?

      (இ) (i) கால்டன் றக்பி சுற்றுப்போட்டியின் ஏற்பாட்டாளர் யாவரென்பதையும்;

      (ii) மேற்படி சுற்றுப்போட்டியின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அனுசரணையாளர்கள் யாவரென்பதையும்;

      (iii) மேற்படி ஒவ்வொரு அனுசரணையாளரும் வழங்கிய பணத் தொகை தனித்தனியே எவ்வளவென்பதையும்;

      (iv) மேற்படி சுற்றுப்போட்டியை ஒளிபரப்பிய தொலைக்காட்சி அலைவரிசை யாதென்பதையும்;

      (v) மேற்படி சுற்றுப்போட்டியின் ஒளிபரப்புக்கான செலவினம் யாதென்பதையும்;

      (vi) ஒளிபரப்பிற்கான அனுசரணை வழங்கிய நிறுவனங்கள் யாவையென்பதையும்;

      (vii) இதற்காக மேற்படி நிறுவனங்கள் வழங்கிய பணத் தொகை எவ்வளவென்பதையும்

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-07-24

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

அமைச்சு

விளையாட்டுத்துறை

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2013-09-18

பதில் அளித்தார்

கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks