பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2884/ ’12
கெளரவ வசந்த அளுவிகாரே,— கூட்டுறவு, உள்நாட்டு வர்த்தக அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கூட்டுறவுச் சங்கங்களின் நிதி, நிருவாக தத்துவங்கள் தேர்தலினால் நியமிக்கப்படும் தலைவர் மற்றும் பணிப்பாளர் சபையிடம் கையளிக்கப் படுவதனால் குறித்த சங்கங்களில் ஊழல் மற்றும் முறைகேடுகள் இடம்பெறுகின்றன என்பதையும்;
(ii) இத்தகைய நிலைமையில், மாத்தளை, ரத்தோட்டை கூட்டுறவுச் சங்கத்தின் நிதி நிருவாகத்தில் இடம்பெற்றுள்ள மோசடி மற்றும் ஊழல் காரணமாக குறித்த சங்கமானது பாரிய நிதி நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளது என்பதையும்;
(iii) நிதி நெருக்கடி காரணமாக மேற்படி கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மற்றும் ‘கோப்சிட்டி’ நடத்திச் செல்ல முடியாத நிலையில் உள்ள நுகர்வோர் மிகுந்த நெருக்கடிக்கு ஆளாகியுள்ளார்கள் என்பதையும்
அவர் ஏற்றுக்கொள்வாரா?
(ஆ) ரத்தோட்டை கூட்டுறவுச் சங்கத்தின்,
(i) கூட்டுறவு விற்பனை நிலையங்கள், ‘கோப்சிட்டி’, தற்போது இயங்கும் நிலையில் உள்ள கூட்டுறவு விற்பனை நிலையங்கள் அல்லது ‘கோப்சிட்டி’ மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை;
(ii) கூட்டுறவு விற்பனை நிலையங்களிலிருந்து தேர்தலில் கலந்து கொள்ள வேண்டிய பொதுச்சபை பிரதிநிதிகளின் எண்ணிக்கை மற்றும் 2010.03.20 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் கலந்து கொண்ட மேற்குறிப்பிடப்பட்ட பிரதிநிதிகளின் எண்ணிக்கை
யாதென்பதை அவர் வெவ்வேறாகக் குறிப்பிடுவாரா?
(இ) (i) கூட்டுறவுச் சங்கங்களில் இடம்பெறும் நிர்வாக குறைபாடுகள், ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
(ii) ரத்தோட்டை பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் இடம்பெற்றுள்ள மோசடியான கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் முறையான விசாரணை மேற்கொள்ளப்படுமா என்பதையும்;
(iii) ஆமெனில், குறித்த திகதி யாது என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2012-11-22
கேட்டவர்
கௌரவ வசந்த அலுவிஹாரே, பா.உ.
அமைச்சு
கூட்டுறவு, உள்நாட்டு வர்த்தக
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2013-01-09
பதில் அளித்தார்
கௌரவ ஜோன்ஸ்டன் பர்னாந்து, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks